தேசிய ஒருமைப்பாட்டை வலுப் படுத்த பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை இந்தி மொழிப் பாடத்தை கட்டாயமாக்குமாறு உத்தரவிடக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்துவிட்டது.
வழக்கறிஞரும் டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளருமான அஸ்வினி குமார் உபாத்யாய இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “ஆளும் கட்சியை சேர்ந்த நீங்கள் ஏன் மத்திய அரசிடம் இதை கேட்கக்கூடாது. பிற மொழி மக்களும் தங்கள் மொழியை ஏன் பயிற்றுவிக்கக் கூடாது என கேட்க வாய்ப்புள்ளது” என்று கூறி மனுவை திரும்பப் பெற உத்தரவிட்டனர்.