சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அதன் அடிப்படையில் தற்போது சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், நாடு முழுவதும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.16 குறைக்கப்பட்டது. டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.2.10 குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு நேற்றிரவு முதல் அமலுக்கு வந்தது.
கடந்த மே 1-ம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு 2 பைசா, டீசல் லிட்டருக்கு 52 பைசா உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.