சைலம் தடுப்பு சுவரில் மோதி நின்ற தெலங்கானா அரசு பஸ். 
இந்தியா

ஸ்ரீசைலம் மலைப்பாதையில் பேருந்து விபத்து தடுப்பு சுவரால் உயிர் தப்பிய 35 பயணிகள்

செய்திப்பிரிவு

ஸ்ரீசைலம்: ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம், ஸ்ரீசைலத்திலிருந்து தெலங்கானா மாநிலம் மகபூப் நகருக்கு தெலங்கானா மாநில அரசு பஸ் 35 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.

அப்போது ஸ்ரீசைலம் அணைக்கட்டு அருகே இந்த பஸ் மலைப்பாதையில் சென்றபோது, ஒரு வளைவில் அந்த பஸ் சாலை ஓரத்தில் இருந்த தடுப்பு சுவரை மோதி விபத்துக்குள்ளானது. ஆனால், அதிருஷ்டவசமாக அந்த பஸ் அந்த தடுப்பு சுவருக்கு அப்பால் போடப்பட்டிருந்த இரும்பு கம்பியின் உதவியால், கீழே பல நூறு அடி பள்ளத்தில் விழாமல் நின்றது.

உடனடியாக அந்த பஸ்ஸில் இருந்த 35 பயணிகளும் பீதியுடன் கீழே இறங்கினர். அதன் பின்னர் லாவகமாக பஸ் ஓட்டுனர் பஸ்ஸை பின்னால் எடுத்து நிறுத்தினார். அந்த பஸ் ஒருவேளை மிக வேகமாக வந்து தடுப்பு சுவரை மோதி இருந்தால், பெரும் விபத்து நிகழ்ந்திருக்கும் என விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறி வியந்தனர்.

SCROLL FOR NEXT