கர்நாடக பாஜகவின் முதல்வர் வேட்பாளராக எடியூரப்பா (74) அதிகாரப்பூர்வமாக அறிவிக் கப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய முக்கிய அரசியல் கட்சியினர் தேர்தல் வேலைகளை முடுக்கி விட்டுள்ளனர். ஆனால் மாநில பாஜகவில் மாநில தலைவர் எடியூரப்பாவுக்கும் மூத்த தலைவர் ஈஸ்வரப்பாவுக்கும் இடையே கோஷ்டிப் பூசல் வலுத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக மேலிடம், எடியூரப்பாவுக்கு எதிராக செயல்பட்ட ஈஸ்வரப்பாவின் ஆதரவாளர்கள் நால்வரை கட்சியை விட்டு நீக்கியது.
இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடகாவில் பாஜக மாநில தலைவராக எடியூரப்பா இருக் கிறார். கட்சியில் அனைத்து நிர்வாகிகளும் எடியூரப்பாவின் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே அவர் தலைமையின் கீழ் தேர்தலை சந்திப்பதே சரியானதாக இருக்கும். 2018-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர் தலில் பாஜகவின் முதல்வர் வேட் பாளராக எடியூரப்பா முன்னிறுத் தப்படுவார். அனைத்து தலைவர் களும் ஒற்றுமையாக இருந்து ஆட்சியை கைப்பற்றுவதில் உறுதியாக இருக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அமித் ஷாவின் இந்த அதிகாரப் பூர்வ அறிவிப்பால் பாஜக மூத்த தலைவர்களான ஈஸ்வரப்பா, ஜனார்த்தன ரெட்டி உள்ளிட்டோர் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக ஈஸ்வரப்பா தலைமையிலான சங்கொல்லி ராயண்ணா பிரிகேட் அமைப்பினர் கூறும்போது, “எடியூரப்பாவின் தலைமையை ஏற்க முடியாது. சாதி பார்வையோடு ஒரு தலைப்பட்சமாக செயல்படும் எடியூரப்பாவை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தக் கூடாது” என்றனர்.
இது தொடர்பாக ஈஸ்வரப்பா வின் ஆதரவாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான சுரானா கூறும் போது, “எடியூரப்பா தனது சாதியை சேர்ந்த லிங்காயத்து நிர்வாகிகளுக்கு மட்டுமே கட்சியில் முன்னுரிமை அளிக்கிறார். கடந்த 2008-ம் ஆண்டு எடியூரப்பா முதல் வரானபோது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் ஆட்சியை இழந்த அவர், சிறையிலும் அடைக்கப்பட்டார்.
ஒரு கட்டத்தில் பாஜகவில் இருந்து விலகிய அவர், கர்நாடக ஜனதா என்ற பெயரில் தனிக் கட்சியை தொடங்கினார். கடந்த 2013-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எடியூரப்பா தனியாக போட்டியிட்டதாலே பாஜக தோல்வி அடைந்தது. எனவே மீண்டும் அவரது தலைமையின் கீழ் தேர்தலை சந்திப்பது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். கட்சிக்கும், மக்களுக்கும் நல்லது செய்யக்கூடிய மூத்த தலைவர் களை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்” என்றார்.
இதற்கிடையில் எடியூரப் பாவின் ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். பெங்களூரு, ஷிமோகா, மங்களூரு ஆகிய இடங்களில் உள்ள எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடினர்.