டெல்லியில் போதைப் பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 6 பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். இவர்களில் நால்வர் வெளிநாட்டினர் ஆவர்.
இதுகுறித்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
கைது செய்யப்பட்ட 6 பேரில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இரு பெண்கள், ஸ்பெயின் மற்றும் பொலிவியாவைச் சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் வெளிநாட்டினர் ஆவர். இவர்கள் தவிர வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோகைன், ஆம்பீடமைன் போன்ற தடை செய்யப்பட்ட போதைப்பொருள் வர்த்தகத்தில் இவர்கள் ஈடுபட்டனர். ரூ.20 கோடி மதிப்பிலான போதைப் பொருள் வர்த்தகத்தில் இவர்கள் ஈடுபட்டனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.