கலவரத்தால் பாதிக்கப்பட்ட உபியின் சஹரான்பூரில் ஊரடங்கு உத்தரவு நான்கு மணி நேரம் தளர்த் தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் நரேந் திர மோடியை சந்தித்த ராஜ்நாத் சிங், விரிவாக எடுத்துரைத்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, “சஹரான்பூரின் நிலைமை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. தீவிர கண்காணிப்பு தொடர்கிறது’ எனத் தெரிவித்தார்.
இதையடுத்து சஹரான்பூரில், காலை 10 முதல் 2.00 மணி வரை பழைய நகரத்திலும் மற்றும் மாலை 3 முதல் 7.00 மணி வரை பழைய நகரத்திலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.
இது குறித்து சஹரான்பூர் மாவட்ட ஆட்சியர் சந்தியா திவாரி, ‘நிலைமையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. இது, பொதுமக்கள் தம் அத்தியாவசிய தேவைகளை கடைகளில் பெற்றுக் கொள்ளும் வகையில் அமைந்திருந்தது. இந்த நிலை நகரில் சூழும் அமைதியை பொறுத்து நீட்டிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
குதுப்ஷேர் பகுதியில் உள்ள மசூதியில் அருகிலுள்ள குருத்து வாராவின் சீக்கியர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றதாக இரு தரப்பினருக்கு இடையே மோதல் உருவானது.
இது, கலவரமாக வெடித்ததில் 3 பேர் பலியாகினர்; 33 பேர் காயம் அடைந்தனர். கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சஹரான் பூரின் ஆறு காவல் நிலையப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கலவரக்காரர் களை கண்டதும் சுட உத்தரவும் போடப்பட்டது. இந்தக் கலவரத்தில் இதுவரை 38 பேர் கைது செய்யப்பட்டு, பல்வேறு காவல் நிலையங் களில், ஆறு வழக்குகள் பதிவாகி உள்ளன. கலவரத்தை தூண்டியவர்களில் முக்கியமான ஒருவரை சஹரான்பூர் போலீசார் அடையாளம் கண்டிருப்பதாகவும், விரைவில் அந்த நபர் கைது செய்யப்படுவார் எனவும் மாவட்ட காவல்துறை தலைமை கண் காணிப்பாளர் ராஜேஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.
டெல்லிக்கு சுமார் 170 கி.மீ தொலைவில் இருக்கும் சஹரான்பூரில் கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என பாகிஸ்தானில் வெளியாகும் நாளிதழ்கள் வலியுறுத்தி உள்ளன.
இத்துடன், கடந்த 17 ஆம் தேதி மகராட்டிரா சதனின் 11 சிவசேனா எம்பிக்கள் அதன் உணவு மேற்பார்வையாளரின் நோன்பை பலவந்தமாக முறித்ததாகக் கிளம்பிய புகாரையும் கண்டித்து எழுதியுள்ளன.