இந்தியா

புதிதாக சிந்தியுங்கள், முன்னேறுங்கள் - கர்நாடக மாணவர்களுக்கு அமித் ஷா அறிவுரை

செய்திப்பிரிவு

ஹப்பள்ளி: கர்நாடகா வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஹப்பள்ளியில் உள்ள பிவிபி பொறியியல் கல்லூரியில் நடந்த அமிர்த மகோத்சவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களிடம் பேசியதாவது:

நமது சுதந்திர போராட்ட வீரர்கள் செய்த உன்னத தியாகங்களை மாணவர்கள் படிக்க வேண்டும். நாட்டுக்காக உங்கள் வாழ்வை தியாகம் செய்ய முடியாது என்றால், நாட்டுக்காக நீங்கள் வாழ்ந்து, நம் நாட்டை உலகின் முதல் நாடாக ஆக்க வேண்டும். இதற்கான அனைத்து வாய்ப்புகளையும் உங்களுக்கு பிரதமர் மோடி வழங்கியுள்ளார். வடக்கு கர்நாடகாவில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அறிவியல் மாணவர்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளன. இவற்றை பயன்படுத்தி நீங்கள் புதிதாக சிந்தித்து முன்னேற வேண்டும். 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பிரதமர் நரேந்திர மோடியிடம் உள்ளது. இந்த வாய்ப்புகள் மாணவர்களுக்குதான் உள்ளது.

இவ்வாறு அமித் ஷா கூறினார்.

SCROLL FOR NEXT