இந்தியா

வாஜ்பாய்க்கு 92-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி நேரில் சென்று வாழ்த்து

பிடிஐ

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நேற்று 92-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவரை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுடன் சென்ற பிரதமர் மோடி, வாஜ்பாய் குடும்பத்தினரை யும் சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து ‘ட்விட்டர்’ பக்கத்தில் அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘‘எங்களது அன்புக் குரிய மற்றும் அனைவராலும் மதிக்கப்படும் அடல்ஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல ஆரோக் கியத்துடன் நீண்ட நாள் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாஜ்பாயுடனான தனது கடந்த கால வாழ்க்கை குறித்த வீடியோ காட்சிகளையும் பிரதமர் மோடி வெளியிட்டார். பின்னர் ‘மன் கீ பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பேசியபோதும், நாட்டின் வளர்ச்சிப் பணியில் வாஜ்பாயின் பங்களிப்பு குறித்து பெருமிதமாக பேசினார்.

‘‘இன்று பாரத ரத்னா வாஜ்பாயின் பிறந்த நாள். நாட்டுக்காக அவர் வழங்கிய பங்களிப்பு மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும். அவரது தலைமையின் கீழ் தான், நம் நாடு அணு சக்தி துறையில் தலைநிமிர்ந்து நின்றது. கட்சியின் தலைவராக, நாடாளுமன்ற உறுப் பினராக, மத்திய அமைச்சராக, பிரதமராக என எந்தவொரு பதவி யில் இருந்தாலும் வாஜ்பாய் சிரத் தையுடன் பணியாற்றினார். இந்த நேரத்தில் அவரை வணங்கு கிறேன்’’ என்று புகழாரம் சூட்டினார்.

சுதந்திர போராட்ட வீரரும், கல்வியாளருமான மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாளும் நேற்று கொண்டாடப்பட்டது. அவருக்கும் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

SCROLL FOR NEXT