போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி 
இந்தியா

74வது குடியரசு தின விழா | டெல்லியில் போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: 74வது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தலைநகர் டெல்லியில் சரியாக காலை 10 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி போர்வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளும் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அங்கிருந்த குறிப்பேட்டில் பிரதமர் மோடி தனது அஞ்சலிக் குறிப்பினை பதிவிட்டார். தொடர்ந்து அங்கிருந்து குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும் கர்தவ்ய பாதைக்கு சென்றனர்.

போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு அதிபர் மாளிகையில் இருந்து விழாவிற்குப் புறப்பட்டு வந்து கொண்டிருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, எகிப்து நாட்டு அதிபர் அப்தெல் படாக் அல்-சிசி ஆகியோரை வரவேற்றார். குடியரசு தின விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வண்ணமயமான தலைப்பாகை அணிந்து வந்துள்ளார்.

SCROLL FOR NEXT