இந்தியா

எதிரி சொத்து அவசர சட்டம் மீண்டும் பிறப்பிப்பு

பிடிஐ

பாகிஸ்தான் மற்றும் சீனா உடனான போர்களுக்குப் பிறகு, இந்தியாவிலிருந்து வெளியேறிய அந்நாடுகளைச் சேர்ந்தவர்கள் விட்டுச் சென்ற சொத்துக்களை நிர்வகிக்க, 1968-ல் இயற்றப் பட்ட அவசரச் சட்டத்தில் திருத்தங்களை முன்வைத்து, கடந்த ஜனவரி 7-ம் தேதி முதல் முறையாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

அதன் பிறகு, 4 முறை அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, ஒவ்வொரு முறையும் உரிய காலக்கெடுவுக்குள் நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் போனது.

எனவே, எதிரி சொத்து திருத்த அவசரச் சட்டம் 5-வது முறையாக நேற்று முன்தினம் நள்ளிரவில் பிறப்பிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT