குருவாயூர் கோயில் | கோப்புப்படம் 
இந்தியா

குருவாயூர் கோயிலிடம் 263 கிலோ தங்கம் ரூ.1,700 கோடி டெபாசிட்

செய்திப்பிரிவு

திரிச்சூர்: கேரள மாநிலம் குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலுக்கு இதுவரை 263.637 கிலோ தங்கம், 20,000 தங்கத் தகடுகளை பக்தர்கள் காணிக்கையாக வழங்கி உள்ளனர். மேலும், குருவாயூர் கோயில் பெயரில் ரூ.1,700 கோடிக்கு வங்கி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

தவிர, 271.05 ஏக்கர் நிலம் கோயில் பெயரில் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தின் மதிப்பு இதுவரை கணக்கிடப்படவில்லை.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் முறையீடு செய்யப்பட்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அதிகாரிகள் அளித்த பதிலில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT