இந்தியா

பஞ்சாப் நாபா சிறை தாக்குதலில் இருவர் சிக்கினர்

பிடிஐ

பஞ்சாபில் நாபா சிறை தாக்குதல் சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் கங்காநகர் மாவட்டம், கிஷன் புரா என்ற கிராமத்தில் குர்பிரீத் பிரார், அவரது மைத்துனர் ஆங்ரெஜ் சிங் ஆகிய இருவரையும் பஞ்சாப் போலீஸார் நேற்று முன்தினம் இரவு பிடித்தனர்.

இவர்களில் குர்பிரீத் பிரார், பஞ்சாபின் பெரோஸ்பூரை சேர்ந் தவர். இவர், சிறையில் இருந்து தப்பியவர்களில் ஒருவரான குர்பிரீத் சேகோன் என்பவரின் நண்பர் ஆவார். இவர்கள் இரு வரும் விசாரணைக்காக பஞ்சாப் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

பாட்டியாலா நகரில் உள்ள நாபா சிறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி, காலிஸ்தான் விடுதலை முன்னணி தலைவர் ஹர்மிந்தர் சிங் உள்ளிட்ட 6 கைதி களை மீட்டுச் சென்றனர். இவர் களில் ஹர்மிந்தர் சிங், பர்மிந்தர் சிங் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT