‘ஆசியாவின் இதயம்’ என்ற தலைப்பில் டெல்லியில் நடைபெற உள்ள மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலான குழுவினர் பங்கேற்க உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக நடைபெறும் இந்த மாநாடு வரும் 3-ம் தேதி டெல்லியில் தொடங்குகிறது. இதன் ஒரு பகுதியாக 4-ம் தேதி நடைபெறும் முக்கியமான கருத்தரங்கை பிரதமர் நரேந்திர மோடியும் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனியும் தொடங்கி வைக்கின்றனர்.
2 நாட்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டில் வழக்கமாக கலந்துகொள்ளும் மத்திய வெளி யுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடல்நலக்குறைவு காரணமாக பங்கேற்க மாட்டார் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேநேரம் இந்த மாநாட்டில் அருண் ஜேட்லி தலைமையிலான குழு பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடு களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் பாகிஸ்தானும் பங்கேற்கும் என அந்நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நபீஸ் ஜகாரியா தெரிவித்துள்ளார்.