இந்தியா

ராஜீவ் படுகொலை வழக்கின் முக்கிய சாட்சி பிரதமருக்கு கடிதம்

பிடிஐ

ராஜீவ் காந்தி படுகொலை பின்னணியில் உள்ள மிகப்பெரிய சதித்திட்டம் குறித்து விசாரிக்கக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்க சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், விசாரணை நேர்மையாக நடப்பதை உறுதி செய்ய வேண்டுமென, இவ்வழக்கின் முக்கிய சாட்சியான ரமேஷ் தலால் பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக்கொண்டுள்ளார்.

ராஜீவ் படுகொலை குறித்த ஜெயின் கமிஷன் விசாரணையில் முக்கிய சாட்சியான வழக்கறிஞர் ரமேஷ் தலால் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

ராஜீவ் கொலை தொடர்பான சிபிஐ விசாரணையில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன. முக்கியமான சிலவற்றை விசாரிக்கவில்லை. இக்கொலைச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள மிகப் பெரிய சதித் திட்டம் குறித்த சந்தேகங்களின் அடிப்படையில் தனியாக துணைக் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்ய உள்ளது.

அதேபோல், படுகொலைக்கான பின்னணியில் மிகப்பெரிய சதித் திட்டம் இருப்பதாக, இவ்வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் எழுப்பிய கேள்விக்கு, பதில் அளிக்குமாறு சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ, நுண்ணறிவுப் பிரிவு, ரா உளவு அமைப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளை உள்ளடக்கிய எம்டிஎம்ஏ மற்றும் சிபிஐயின் வழக்கு குறிப்பேடுகளையும் பேரறிவாளன் கோரியுள்ளார்.

இந்த சூழலில், இவ்விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் பிரதமர் கவனம் செலுத்தி, நேர்மையான, சுதந்திரமான விசாரணை நடப்பதை உறுதி செய்ய வேண்டும்’ எனக் கோரப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT