இந்தியா

ஜாகிர் நாயக் மீது நிதிமுறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை பதிவு

கவுதம் எஸ்.மெங்ளே

இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக் மீது அமலாக்கப்பிரிவினர் வெள்ளியன்று நிதிமுறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அமலாக்கப்பிரிவின் மும்பை பிரிவு இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கும் போது, “நாயக்கின் இஸ்லாமிய ஆய்வு நிறுவனத்தின் நிதிநடவடிக்கைகள் குறித்த தேசிய புலனாய்வு கழகத்தின் தகவல் அடிப்படையில் குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.

ஏற்கெனவே தேசிய புலனாய்வுக் கழகம் இவர் மீது சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதற்கும் முன்னதாக ஜாகிர் நாயக் உரைகளின் தன்மையை ஆராயுமாறு மகாராஷ்டிர அரசு மும்பை போலீஸுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் நிதிமுறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் இன்று ஜாகிர் நாயக் மீது அமலாக்கப்பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.

SCROLL FOR NEXT