இந்தியா

விவசாயிகளை அழிக்க விரும்புகிறார் மோடி: அஜித் சிங் சாடல்

பிடிஐ

பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளை அழிக்கும் முனைப்புடனேயே ரூ.500, 1000 நோட்டு செல்லாது என்ற நடவடிக்கையை மேற்கொண்டார் என்று ராஷ்ட்ரிய லோக்தள் தலைவர் அஜித் சிங் சாடியுள்ளார்.

உ.பி., முசாபர்நகரில் பேசிய அஜித் சிங், “பணமதிப்பு நீக்கம் விவசாயிகளுக்கும், சாமானியர்களுக்கும் மிகப்பெரிய பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. மோடியின் கொள்கைகள் விவசாயிகளுக்கு எதிரானது, அவர் விவசாயிகளை அழித்தொழிக்க விரும்புகிறார்.

முதலில் அவர் அயல்நாடுகளில் பதுக்கப்பட்ட கறுப்புப் பணத்தை கொண்டு வருகிறேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றத் தவறினார், பிறகு ரூ.500, 1000 பயன்பாட்டை நீக்கினார்.

தற்போது கோதுமை இறக்குமதி தீர்வையை ரத்து செய்து நம் நாட்டு விவசாயிகளை அழிக்க முயல்கிறார்.

மேலும் விவசாயிகளை வகுப்புவாத ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சி செய்து தேர்தல் பலன் அடைய நினைக்கிறார். இதற்கெல்லாம் பதிலடி உ.பி.சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-வை தோற்கடிப்பதேயாகும்.” என்றார்.

பொதுக்கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷரத் பவார், ஐக்கிய ஜனதா தள தலைவர்க்ள் ஷரத் யாதவ், கே.சி. தியாகி ஆகியோரும் ஆளும் பாஜக கூட்டணியைக் கடுமையாகத் தாக்கிப் பேசினர்.

SCROLL FOR NEXT