மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் ராம் கிருபால் யாதவ் கூறியதாவது:
பிரதமரின் அவாஸ் யோஜனா (பிஎம்ஏஒய்) திட்டத்தின் கீழ் வரும் 2022-ம் ஆண்டுக்குள் 2 கோடி ஏழை குடும்பங்களுக்கு வீடு கட்டித்தர திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 60 சதவீத வீடுகள் வீடில்லாதவர்கள் மற்றும் குடிசைகளில் வசிக்கும் எஸ்சி, எஸ்டி இனத்தவர்களுக்கு ஒதுக்கப்படும்.
கழிவறை கட்டுவதற்காக ரூ.12 ஆயிரம் வழங்கப்படுவதுடன் வீட்டின் கட்டுமானப் பணிகளுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களை (ரூ.18 ஆயிரம் மதிப்புக்கு) பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் அமர்ஜீத் சின்ஹா கூறும்போது, “பிரதமரின் வீடு கட்டித்தரும் திட்டத்தின் கீழ், வீடில்லா குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எனவே, இதுபோன்ற குடும் பத்தைச் சேர்ந்த பெண்களின் பெயரில் நிலம் ஒதுக்குமாறு மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அப்போது தான் அவர்களுக்கு இந்த திட்டத் தின் கீழ் வீடுகட்டிக்கொள்ள நிதியுதவி வழங்க முடியும்” என்றார்.