டெல்லியில் 17 வயது சிறுமியை அவரது நண்பர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்றார்.
இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தனது இரு நண்பர்களுடன் அந்த சிறுமி ஷாப்பிங் செய்வதற்காக துவாரகாவுக்கு சென்றார். இரவு 7.30 மணியளவில் அந்தச் சிறுமி காரில் நண்பர்களுடன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது காரில் இருந்து இறங்கிய சுபம் என்பவர் சிறுமியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார்’’ என்றார்.