இந்தியா

5 மாநில தேர்தலுக்கு 85 ஆயிரம் வீரர்கள்: மத்திய அரசு தகவல்

பிடிஐ

உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், கோவா, பஞ்சாப் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 1 லட்சம் துணை ராணுவப் படை வீரர்களை தயார் நிலையில் வைக்குமாறு மத்திய அரசுக்கு ஆணையம் கோரிக்கை வைத்திருந்தது.

இந்நிலையில், இது தொடர்பான உயர்நிலை ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், தேர்தல் பணிகளுக்காக 1 லட்சம் வீரர்களை அனுப்ப இயலாது என்றும் 85 ஆயிரம் வீரர்களை அனுப்ப தயார் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்தத் தகவல் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலின் போது, துணை ராணுவ வீரர் களுடன் அந்தந்த மாநில போலீஸா ரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

SCROLL FOR NEXT