379 வகை உணவுகளை ருசி பார்க்கும் மாப்பிள்ளை 
இந்தியா

பொங்கல் பண்டிகைக்கு மருமகனுக்கு 379 வகை உணவு

செய்திப்பிரிவு

விசாகப்பட்டினம்: ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூரை சேர்ந்த பீமா ராவின் மகள் குஷ்மாவுக்கும் பொறியாளர் முரளிதருக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், தலைப்பொங்கலுக்கு கடந்த சனிக்கிழமை தனது மாமனார் வீட்டுக்கு வந்தார் முரளிதர். அவருடன் மனைவி குஷ்மாவும் வந்திருந்தார். இவர்களுக்கு இனிப்பு, காரங்கள் உட்பட 379 வகை உணவுகளை சமைத்து குடும்பத்தினர் பரிமாறினர். இவர்களின் உபசரிப்பை கண்டு அசந்துபோனார் மாப்பிள்ளை முரளிதர். ஆந்திர மாநிலத்தில் கோதாவரி மாவட்டங்களில் இதுபோன்ற உபசரிப்பு தற்போது அதிகரித்து விட்டது. இதுவரையிலான உபசரிப்பை விட தனது மருமகனுக்கு அதிகபட்சமாக 379 வகை உணவுகளை சமைத்தது தனக்கு பெருமையாக உள்ளது என குஷ்மாவின் தாயார் கூறினார்.

SCROLL FOR NEXT