பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் மத்தியப் பிரதேசத்தில் உள்ள வங்கி ரூபாய் நோட்டு அச்சகம் (பிஎன்பி) ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணிகளை விரைவுப் படுத்தியுள்ளது. இதற்காக ஓய்வு பெற்ற ஊழியர்களையும் மீண்டும் பணி அமர்த்தியுள்ளது.
இதுகுறித்து பிஎன்பி மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘ஓய்வு பெற்ற மற்றும் அனுபவம் உள்ள ஊழியர்களை கொண்டு முழு திறனுடன் எங்களது அச்சகம் பணியாற்றி வருகிறது. கடந்த 1-ம் தேதி எங்களது அச்சகத்தில் இருந்து அச்சடிக்கப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகள் முதல் முறை யாக போபாலுக்கு அனுப்பி வைக் கப்பட்டன. அதன் பின் டெல்லி, சண்டிகர், கொல்கத்தா, குவா ஹாட்டி, கான்பூர், பெங்களூரு, இந்தூர் ஆகிய நகரங்களுக்கும் புதிய ரூபாய் நோட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன’’ என்றார்.
பண மதிப்பு நீக்க நடவடிக் கைக்கு முன்பாக இந்த அச்சகத்தில் 20, 50, 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன. ஆனால் தற்போது வெறும் 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே அச் சடிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இங்குள்ள ஊழியர்களும், வார விடுமுறை எடுக்காமல் 24 மணி நேரமும் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணி யில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின் றனர். அனில் குப்தா என்ற ஊழியர் கூறும்போது, ‘‘எனது சொந்த சகோதரரின் திருமணத்துக்கு கூட செல்லாமல் அச்சடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். இதனால் எங்களுக்கு எந்த தொந்தரவும் ஏற் படவில்லை. மாறாக நாட்டுக்காக உழைக்கிறோம் என்ற பெருமை தான் ஏற்படுகிறது’’ என்றார்.
அச்சடிக்கும் பணிகள் பாதிக்கப் படும் என்பதால் பெரும்பாலான ஊழியர்கள் தங்களது மதிய நேர உணவை கூட கூட்டாக அமர்ந்து சாப்பிடுவதில்லையாம். அச்சுப் பணிக்கு பாதிப்பு ஏற்படாத வகை யில் சமயம் கிடைக்கும்போது உணவு சாப்பிடுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.