அந்தமான் தீவுகளில் புகழ் பெற்ற சுற்றுலா பகுதிகளில் ஒன்றாக ஹேவ்லாக் தீவு திகழ் கிறது. போர்ட் பிளேரில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள இத் தீவுக்கு, ஹெலிகாப்டர் அல்லது படகுகளை மட்டுமே போக்கு வரத்துக்கு பயன்படுத்த முடியும். இப்பகுதியில் எப்போதும் சுற்று லாப் பயணிகள் வந்த வண்ணம் இருப்பார்கள்.
இந்நிலையில், வங்கக் கடலின் தென்கிழக்கே உருவான காற்ற ழுத்த தாழ்வு நிலை காரணமாக இப்பகுதியில் புயலுடன் கூடிய கன மழை பெய்துவருகிறது. கடல் சீற்றமும் அதிகளவில் காணப்படு வதால், படகு மற்றும் ஹெலி காப்டர் போக்குவரத்து நிறுத்தப் பட்டது.
இதனால், ஹேவ்லாக் தீவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 1,400 பேர் போர்ட் பிளேருக்கு திரும்ப முடியாமல் தீவில் சிக்கி யிருப்பதாக, தெற்கு அந்தமான் துணை கமிஷனர் உதித் பிரகாஷ் ராய் தெரிவித்தார்.
ஹேவ்லாக் மற்றும் நீல் தீவு களில், வசிக்கும் 10 கிராமங் களைச் சேர்ந்த மக்களும் அத்தியா வசியப் பொருட்கள் கிடைக் காமல் கடுமையாக பாதிக்கப்பட் டிருப்பதாக, தகவல்கள் வெளியா கின்றன.
இந்நிலையில், மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘ஹேவ்லாக் தீவில் உள்ள அனைத்து சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர். போர்ட் பிளேரில் தயார் நிலையில் உள்ள மீட்புக் குழுவினர், வானிலை சீர டைந்தவுடன், துரித கதியில் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கு வார்கள். எனவே, ஹேவ்லாக்கில் சிக்கியுள்ள சுற்றுலாப் பயணிக ளும், அவர்களின் உறவினர்களும் அச்சம் கொள்ள வேண்டாம்’ எனக் கூறியுள்ளார்.