ஹைதராபாத்தில் நானக்ராம் கூடா பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருந்த 6 அடுக்கு கொண்ட கட்டிடம் வியாழக்கிழமை இரவு திடீரென சரிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த துயர சம்பவத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம், சிலகலபல்லி மற்றும் பொப்புலிகூடா கிராமங்களைச் சேர்ந்த 4 குடும்பத்தினர் இந்த கட்டிடத்தில் தங்கி வேலை செய்து வந்தனர். ஆண்கள், பெண் கள், குழந்தைகள் என மொத்தம் 20 பேர் இங்கு தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கட்டி டத்துக்குப் பக்கத்தில் மற்றொரு கட்டிடம் கட்டுவதற்காக 50 அடி ஆழம் வரை தோண்டப்பட்டது. இதனால் பலவீனமடைந்த புதிய கட்டிடம் நேற்று முன்தினம் இரவு திடீரென சரிந்து விழுந்தது. இதில் 4 தொழிலாளர்கள் பலியாகி யுள்ளனர். மேலும் பலர் இடிபாடு களில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தெலங்கானா மாநில உள்துறை அமைச்சர் நாயனி நரசிம்மா ரெட்டி, மாநகராட்சி துறை அமைச்சர் கே.டி. ராமாராவ், பத்மாராவ், முகமது அலி, மற்றும் ஆந்திர அமைச்சர் மிருனாளினி ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். உயிருடன் மீட்கப்பட்ட 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நவீன தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் இடிபாடுகளில் சிக்கி யிருப்பவர்களைக் கண்டறியும் பணிகளும் நடந்து வருகின்றன.
மேலும் மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர், போலீ ஸார், மாநகராட்சி ஊழியர்கள் ஈடு படுத்தப்பட்டுள்ளனர். கட்டிட உரிமையாளர் நாராயணசிங் தெலங்கானா மாநில அமைச்சரின் உறவினர் என கூறப்படுகிறது. கட்டிடத்துக்கு அனுமதியளித்த ஹைதராபாத் மாநகராட்சி உதவி ஆணையர் மனோகர், நகர திட்ட உதவி அதிகாரி கிருஷ்ண மோகன் இருவரும் பணி இடை நீக்கம் செய் யப்பட்டுள்ளனர். இந்த தகவலைச் செய்தியாளர்களிடம் நேற்று அமைச்சர் கே.டி.ராமாராவ் தெரிவித்தார்.
ரூ.15 லட்சம் நிவாரணம்
இதற்கிடையில் உயிரிழந்தவர் கள் குடும்பத்துக்கு ஆந்திரா அரசு சார்பில் தலா ரூ.5 லட்சமும், தெலங்கானா அரசு சார்பில் ரூ.10 லட்சமும் அறிவிக்கப்பட்டுள் ளது. இதே போல் காயமடைந் தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணத் தொகை அறிவிக்கப் பட்டுள்ளது. கட்டிடம் இடிந்து விழுந்தது தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.