இந்தியா

திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் ரூ.11 கோடி சிக்கியது

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்கம் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான ஜாகீர் ஹுசைனின் முர்ஷிதாபாத் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

புதன்கிழமை மாலை முதல் வியாழன் காலை வரை நடைபெற்ற இந்த சோதனையில் ரூ.11 கோடி பணத்தை வருமான வரி துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இது கணக்கில் காட்டப்பட்ட பணமா என எம்எல்ஏ ஜாகீர் ஹுசைனிடம் விசாரணை நடப்பதாக வருமான வரி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT