மக்களவை நேற்று கூடியதும் காகித ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு களை ரிசர்வ் வங்கி அச்சடிக்க பரிந்துரை செய்துள்ளதா? என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு நிதித்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மெஹ்வால் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில், ‘‘பிளாஸ் டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற் கான மூலப்பொருட்களை கொள் முதல் செய்வதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுவிட்டன’’ என்றார்.
10 ரூபாய் நோட்டுகள் பிளாஸ் டிக்கில் அச்சடிக்கப்பட்டு மாறு பட்ட தட்பவெப்ப நிலை கொண்ட கொச்சி, மைசூரு, ஜெய்பூர், சிம்லா மற்றும் புவனேஷ்வரில் சோதனை ரீதியாக அறிமுகம் செய்யப்படும் என கடந்த 2014 பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.