தெலங்கானாவின் சூர்யபேட் மாவட்டத்தைச் சேர்ந்த சிறு விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை வியாழக்கிழமை வேளாண் சந்தைக்குக் கொண்டுவந்தனர்.
பண மதிப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பணத் தட்டுப்பாட்டின் எதிரொலியாக, தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை மிகக் குறைந்த விலைக்கே வாங்குவதற்கு முன்வந்தனர். அதனால், செய்வதறியாது விரக்தியில் கவலையுடன் பருத்தி மூட்டையில் சாய்ந்து கிடந்தனர்.
நாட்டில் கறுப்பு பணத்தை ஒழிக்கும் தீவிர நடவடிக்கையாக, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து இன்றுடன் சரியாக ஒரு மாதம் நிறைவு பெறுவது கவனிக்கத்தக்கது.
தகவலும் படமும்:ஜி.என்.ராவ்