இந்தியா

சோனியா மட்டுமே காங்கிரஸை எழுச்சிபெறச் செய்ய முடியும்: சசிதரூர் கருத்து

செய்திப்பிரிவு

தேர்தலில் படுதோல்வியடைந் துள்ளதால் துவண்டுபோயுள்ள காங்கிரஸ் கட்சியை எழுச்சிபெறச் செய்ய அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியால் மட்டும்தான் முடியும் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சசிதரூர் தெரிவித் துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

காங்கிரஸ் தனது வழக்கமான செயல்பாடுகளைக் கொண்டிருக்க வில்லை. இப்பிரச்சினையைச் சரி செய்வதற்கும், கட்சியை புனரமைக்கவும் தேவையான முடிவுகளை காங்கிரஸ் தலைவர் சோனியா விரைவில் எடுப்பார்.

சோனியாவின் தனிப்பட்ட பகுத்தாயும் திறன் மற்றும் ஏ.கே. அந்தோனி குழு சமர்ப்பித்த அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்படும்.

காங்கிரஸ் கட்சி இரண்டு முறை தேர்தலில் தோல்வியுற்ற போதும், தொடர்ந்து இரண்டு முறை மத்தியில் ஆட்சியமைத்த போதும் அதன் தலைவராக இருந்தவர் என்ற முறையில், சோனியாவால் மட்டுமே கட்சியை எழுச்சி பெறச் செய்ய முடியும்.

அதற்காக ராகுல் காந்தி ஒதுங்கியிருப்பார் என்று அர்த்தமல்ல. ராகுலுக்கு என்று தனியான தலைமைப் பண்பு உண்டு. அவர் சோனியாவுக்கு ஆதரவாக இருப்பார். காங்கிரஸ் தேர்தல்களில் தோற்றபோதும், தொடர்ந்து இரு முறை வென்றபோதும் ராகுல் கட்சியின் துணைத்தலைவராக இல்லை. அதனால்தான், சோனியாவை நான் குறிப்பிட்டேன்.

SCROLL FOR NEXT