பண மதிப்பு நீக்கம் குறித்து மக்களவையில் நேற்று ஆளும் பாஜக.வுக்கும் எதிர்க்கட்சிகளுக் கும் இடையில் காரசார விவாதம் நடந்தது. கூச்சல் குழப்பம் நிலவிய தால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதன்மூலம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் முழுவதும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 16-ம் தேதி தொடங்கியது. அன்று முதல் நேற்று வரை பண மதிப்பு நீக்கம் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அதனால் மக்களவை, மாநிலங்களவையில் எந்த அலுவலும் நடக்கவில்லை.
பரபரப்பான சூழ்நிலையில் மக்களவை நேற்று காலை கூடியது. அப்போது திரிணமூல் எம்.பி. சுதீப் பண்டோபாத்யாயா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பேசும்போது, ‘‘பண மதிப்பு நீக்கம் குறித்து வாக்கெடுப்பு இல்லாத விவாதம் அல்லது எந்த விதியின் கீழும் விவாதம் நடத்தலாம்’’ என்று கூறினர்.
அதற்கு நாடாளுமன்ற விவ காரத் துறை அமைச்சர் அனந்த் குமார் பதில் அளிக்கும் போது, ‘‘கடந்த நவம்பர் 16-ம் தேதியில் இருந்து விவாதம் நடத்த விடாமல் அவையை எதிர்க்கட்சியினர் முடக்கினர். கறுப்புப் பணத்தை ஒழிக்க பண மதிப்பு நீக்க நடவடிக்கையைப் பிரதமர் மோடி எடுத்தார். அதை தோல்வி அடைய செய்ய காங்கிரஸ் கட்சி சதி செய்கிறது’’ என்றார்.
அவர் மேலும் கூறுகையில், ‘‘பண மதிப்பு நீக்கம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என் றால், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் குறித்தும் விவாதம் நடத்த வேண்டும். ஏனெ னில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, முதல் குடும்பத் தாரின் (காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பம்) பெய ரைத்தான் முக்கிய இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் குறிப் பிட்டுள்ளார்’’ என்றார்.
அதைக் கேட்டதும் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் ஆட்சேபம் தெரி வித்து அரசுக்கு எதிராக கோஷ மிட்டனர். பதிலுக்குப் பாஜக எம்.பி.க்கள் குரல் எழுப்பியதால் அவையில் குழப்பம் ஏற்பட்டது.
அப்போது தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) எம்.பி. ஏ.பி.ஜீதேந்தர் ரெட்டி பேசும்போது, ‘‘பண மதிப்பு நீக்கம் தொடர்பாக வாக்கெடுப்பு இல்லாத விவாதத்தை சில நாட் களுக்கு முன்னர் நான் தொடங்கி வைத்துவிட்டேன். ஆனால் விவாதம் நடத்த விடாமல் எதிர்க் கட்சியினர் தடுக்கின்றனர். என்னை பேச அனுமதியுங்கள்’’ என்றார்.
தொடர்ந்து பாஜக எதிர்க் கட்சி எம்.பி.க்கள் கடும் அமளி யில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவ தாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.
மாநிலங்களவை
மாநிலங்களவையிலும் நேற்று ஆளும் பாஜக எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு இடையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் மாநிலங்களவை துணை தலைவர் குரியன் அவையை நாள் முழு வதும் ஒத்திவைத்தார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்றுடன் நிறை வடைகிறது. இன்றும் விவாதம் நடத்தாமல் மக்களவை தேதி குறிப் பிடாமல் ஒத்திவைக்கப்பட்டால், குளிர்கால கூட்டத்தொடர் முற்றி லும் முடங்கியதாகி விடும். எனவே, இன்று விவாதம் நடத்தும் வகையில் அவையை சுமூகமாக நடத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் எதிர்க் கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.