இந்தியா

திரிணமூல் எம்.பி. தபஸ் பால் கைது: சிபிஐ அதிரடி நடவடிக்கை

சவுமியா தாஸ்

ரோஸ்வாலி குழும சிட்பண்ட் முறைகேடு தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. தபஸ் பால் என்பவரை சிபிஐ கைது செய்துள்ளது.

ரோஸ் வேலி குழுமத்திடமிருந்து சட்ட விரோத பயன்களை தபஸ் பால் பெற்றுள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. 2 நாட்களுக்கு முன்னதாக இதே வழக்கு தொடர்பாக சிபிஐ தபஸ் பால் மற்றும் சுதிப் பாந்த்யோபாத்யாய் எம்.பி ஆகியோருக்கு சம்மன் அனுப்பியது.

தபஸ் பால் விசாரணையின் போது முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்ததாகவும் விசார்ணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் சிபிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரோஸ்வேலி குழுமம் மக்களிடமிருந்து ரூ.1,500 கோடி வசூலித்ததாக புகார் எழுந்தது. சாரதா குழுமம் வசூலித்ததை விட இது பல மடங்கு அதிகமானது.

பணமதிப்பு நீக்கத்துக்கு எதிராக கடுமையாக மம்தா பானர்ஜி குரல் எழுப்பி வரும் நிலையில் இந்தக் கைது நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது நரேந்திர மோடி அரசின் ‘பழிவாங்கும் அரசியல்’ என்று மம்தா பானர்ஜி கூறுவதை புறந்தள்ளும் பாஜக தலைவர் திலிப் கோஷ், “பாலின் கைது எதிர்பார்த்ததுதான். சிட்பண்டுகளுடன் திரிணமூல் தலைவர்கள் கொண்டுள்ள தொடர்புகளுக்கு இன்னொரு ஆதாரமே இது” என்றார்.

ஏற்கெனவே ரோஸ்வாலி குழுமத்தின் சேர்மன் கவுதம் குந்து மற்றும் மூவர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT