உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விவாதிப்பது பற்றிய பிரச்சினையில் அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே சுமுக முடிவு ஏற்படாததால் நேற்றும் நாடாளுமன்றத்தில் அமளி நில வியது. இதனால் மக்களவையும், மாநிலங்களவையும் 11-வது நாளாக நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
வாக்கெடுப்புக்கு வகைசெய்யும் விதிகளின் கீழ் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளி்ன் கோரிக்கை. இதை அரசு ஏற்க முன்வராமல் விவாதம் மட்டும் நடத்தலாம் என்பதை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. கூச்சல், குழப்பம் தொடர்ந்து நீடித்ததால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
மக்களவை நேற்று காலையில் கூடியதும் சிறிது நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் அவை கூடியதும், ‘பண மதிப்பு நீக்க பிரச்சினை பற்றி விவாதிக்க எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. விதி 56-ன் கீழ் இந்தப் பிரச்சினை பற்றி விவாதிக்க சபாநாயகர் அனுமதி வழங்கவேண்டும்.
முறைகேடு தொடர்புடைய மிகப் பெரிய விவகாரம் இது. அரசு ஊழியர்களும் ஏழைகளும் சம்பளம் பெற முடியவில்லை’ என்று மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் மல்லிகார்ஜுன் கார்கே கூறினார்.
முறைகேடு, ஊழல் என கார்கே பேசிய பேச்சுக்கு மகாஜன் ஆட்சேபம் தெரிவித்ததுடன், விவா தத்துக்கு நான் தயார் என்று தெரிவித்தார். அப்போது ஜக்கிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ் கட்சி உள்ளிட்டவை சேர்ந்த எதிர்க்கட்சிகள் அவையின் மையப் பகுதிக்கு திரண்டு வாக்கெடுப் புக்கு வகைசெய்யும் விதிகளின் கீழ் விவாதம் நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை வைத்தன.
இதைத்தொடர்ந்து, நாடாளு மன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த் குமார், எதிர்க்கட்சிகளைக் குறிப்பாக காங்கிரஸ் கட்சியை வன்மையாக கண்டித்து பேசினார்.
விவாதிக்க அரசு தயார் என்று சபாநாயகர் மகாஜன் கூறியபோது, வாக்கெடுப்புக்கு வகை செய்யும் விதிகளின் கீழ் மட்டுமே ஏற்க முடியும் என்று கூறினார் கார்கே. காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசியபோது அவர்களுடன் இடதுசாரிகள், சமாஜ்வாதி போன்ற கட்சிகளின் உறுப்பினர்களும் ஆதரவளித்தனர்.
அப்போது அதிமுக, தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தமது இருக்கைகளின் அருகே நின்றிருந்தனர். முன்னதாக கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அவையில் இருந்தார். காலையில் அவை கூடியதும் இரு கேள்விகளை மட்டுமே சபாநாயகர் எடுத்த நிலையில் கூச்சல் தொடர்ந்ததால் பிற்பகல் வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோதும் கூச்சல் குழப்பம் நீடித்தது. இதனால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல், மாநிலங்களவை யிலும் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் திரண்டு அமளி யில் ஈடுபட்டன. எதிர்க்கட்சியினரை, கறுப்புப் பணத்துக்கு ஆதரவானவர் கள் என நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசியதற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தினார்.
2 முறை ஒத்திவைப்புக்குப் பிறகு மாநிலங்களவை பிற்பகல் கூடியபோது பிரதமர் நரேந்திர மோடி அவையில் இருந்தார். அப்போது கூச்சல் குழப்பம் அதிக மானது. எதிர்க்கட்சி உறுப்பினர் களைக் சமாதானப்படுத்த துணை சபாநாயகர் பி.ஜே.குரியன் முயற் சித்தார். எனினும், அமளி நீடித்த தால், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை நேற்று ஒத்தி வைக்கப்பட்ட பிறகும், பிரதமர் நரேந்திர மோடி சிறிது நேரம் அவை யில் தனது இருக்கையில் அமர்ந் திருந்தார். அவருடன், ஆளும் கட்சி மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் பேசிக் கொண்டிருந்தனர்.
அதிமுக எம்பிக்கள் சிலரும், இடதுசாரி எம்பி ஒருவரும், சமாஜ் வாதியின் ஜெயாபச்சன் உள்ளிட் டோரும் அவை ஒத்திவைக்கப் பட்ட பிறகு, பிரதமர் நரேந்திர மோடியை அவரின் இருக்கைக்கு தேடிச் சென்று பேசிக்கொண் டிருந்தனர்.