பிஹார் மற்றும் டெல்லியில் பாஜகவின் புதிய மாநிலத் தலை வர்களாக, நித்யானந்த் ராயும், மனோஜ் திவாரியும் நியமிக்கப் பட்டுள்ளனர்.
பிஹார் மாநில பாஜக தலைவ ராகியுள்ள ராய் (50), 2014 மக்கள வைத் தேர்தலில், உஜ்யார்பூர் தொகுதியில் இருந்து முதல் முறையாக எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்.
தொடக்க காலத்தில் ஆர்எஸ்எஸ்சின் மாணவர் பிரிவான ஏபிவிபி, பாஜகவின் இளைஞர் பிரிவான பிஜேஒய்எம் போன்ற வற்றில் பல்வேறு பொறுப்புகளை வகித்த ராய், 2000-ல் முதல் முறையாக எம்எல்ஏ ஆனார்.
ஆனால், ராய் போல அல்லாமல் திவாரி (43) 2014 மக்களவைத் தேர்தலுக்கு சற்று முன்பு தான் பாஜகவில் சேர்ந்தார். 2009 தேர்தலில், கோரக்பூர் தொகுதியில் சமாஜ்வாதி சார்பில் போட்டியிட்டு தோற்றவர். தற்போது, டெல்லி வடக்கு-கிழக்கு தொகுதி எம்பியாக உள்ள திவாரி, போஜ்பூரில் பாடகரா கவும், நடிகராகவும் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்.