மிசோரம் மாநிலத்தில் மியான்மர் எல்லையை ஒட்டிய பகுதியில் 8 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
மிசோரம் மாநிலம், கிழக்கு மற்றும் தெற்கில் மியான்மர் நாட்டுடன் எல்லையை கொண்டுள்ளது. எல்லைப் பகுதியில் அசாம் ரைபில்ஸ் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாநில காவல்துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மிசோரம் மாநிலத்தின் தெற்கு கடைக்கோடியில் உள்ள சியாகா மாவட்டத்தில் அசாம் ரைபில்ஸ் படையினர் மற்றும் மாநில போலீஸார் கடந்த வியாழக் கிழமை மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் 8 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
சியாகா காவல் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட இத்தீவிரவாதி கள் மீது இந்திய பாஸ்போர்ட் சட்டம் மற்றும் சட்ட விரோத ஆயுதங்கள் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தீவிரவாதி களிடம் இருந்து. பல்வேறு வகை துப்பாக்கிகள், தோட்டாக்கள், எறிகுண்டுகள், எறிகுண்டுகளை வீசும் சாதனம், சீனாவில் தயாரிக்கப்பட்ட 2 கையெறிகுண்டுகள் உள்ளிட் டவை பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.