தீவிர நீரிழிவு நோய் உள்ளவர் கள் நோன்பு மேற்கொண்டால் பாதிப்பு ஏற்படும். எனவே, அவர் களுக்கு ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதிலிருந்து விலக்கு அளிக்கப் படுகிறது என்று அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜமால் அகமது கூறினார்.
ரமலான் நோன்பு பற்றி உத்தரப் பிரதேச மாநிலம் அலிகர் நகரில் உள்ள ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரியின் ராஜீவ் காந்தி நீரிழிவு நோய் மைய இயக்குநர் ஜமால் ‘ தி இந்து’விடம் கூறியதாவது:
3 இஸ்லாமிய நாடுகளில் நடத்தப் பட்ட ஆய்வுகளின்படி, பிரிவு 1 மற்றும் பிரிவு 2 வகை நீரிழிவு நோயாளி முஸ்லிம்கள் முறையே 43 சதவீதம் மற்றும் 79 சதவீதம், அதாவது சுமார் ஐந்து கோடி பேர் ரமலான் நோன்பு மேற்கொள்கின்றனர்.
ரமலான் நோன்பில் பொழுது விடிந்தது முதல் பொழுது சாயும் வரை உணவு, குடித்தல், பாலுறவு போன்றவற்றில் முழுமையான சுயக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது. இருப்பினும், மருத்துவ நிபந்தனைகள் உள்ளவர் களுக்கு, குறிப்பாக தீங்கான பின்விளைவுகள் ஏற்படக்கூடியவர் களுக்கு நோன்பு கடமையிலிருந்து திருக்குர்ஆன் விலக்கு அளிக்கிறது.
நோன்பு கடைப்பிடிக்க விரும்பும் நோயாளிகள் கடுமையான உணவு வழக்கங்களை கடைப்பிடிக்கவும், உணவுக் கட்டுப்பாடுகளை மீறும் ஆர்வத்தை தடுக்கவும் நோயாளி களுக்கு ஊக்கமளிக்க வேண்டும். சர்க்கரைச்சத்து செறிவுக் குறைவு ஆபத்தை தவிர்க்க ரமலானின்போது நீரிழிவுக்கு உகந்த உணவு வகைகளை கடைபிடிப்பது அவசியமாகும்.
நீரிழிவு நோயாளிகள் மருத்துவ ரைத் தவறாது பார்ப்பது, உடல் எடை அளவைக் குறித்து வைத்திருப்பது, சர்க்கரைச் சத்து குறைவு, அதிகரிப்பு ஆகியவற்றின் எச்சரிக்கை அறிகுறி களை கண்காணிப்பது, தவறாது மருந்து உட்கொள்வது ஆகியவைக ளும் அவசியமாகும்.
தினசரி பல நேரங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை கண்காணிக்க நோயாளிகளுக்கு வசதி இருக்க வேண்டும். குறிப்பாக இது பிரிவு 1 நீரிழிவு நோயாளிகள், இன்சுலின் தேவைப்படும் பிரிவு 2 நோயாளிகள் ஆகியோருக்கு முக்கியமாகும்.
மேலும், மெட்ஃபார்மின் (Metformin), சுல்ஃபோனிலுரியா (Sulfonylurea) ஆகிய மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர்கள் நோன்பு இருக்கும்போது வழக்கமான அளவு மெட்ஃபார்மின் தொடர வேண்டும், இரவு உணவுக்கு முன் சுல்ஃபோனிலுரியா மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும். மெட்ஃபார்மின் எடுத்துக் கொள்ளும் பிரிவு 2 நீரிழிவு உள்ளவர்கள் நோன்பை பாதுகாப்பாக மேற்கொள்ள முடியும், பொழுது சாய்ந்த பிறகு எடுத்துக்கொள்ளும் உணவுக்குப் பிறகு அதை எடுத்துக் கொள்ளலாம்.
சர்க்கரை சத்து குறைந்தால் நீரிழிவு நோயாளிகள் உடனடியாக நோன்பை முறித்துக் கொள்ளவேண்டும். கால தாமதமானால் இரத்த சர்க்கரை அளவு மேலும் குறையாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. விரதம் ஆரம்பித்து முதல் சில மணி நேரத்திற்கு பிறகு இரத்தத்தில் சர்க்கரை சத்து குறைந்தாலோ, அதிகரித் தாலோ நோன்பை முறித்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.