பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்களுக்கு ஆறு மாதங்கள் வரை சிரமம் நீடிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற `மேக் இன் ஒடிசா’ மாநாட்டில் பங்கேற்ற அருண் ஜேட்லி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்ட அமலாக்கத்துக்கும் உறு துணையாக இருக்கும் ஒடிசா முதல்வருக்கு நன்றி. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்களுக்கு ஆறு மாதங்கள் வரை சிரமம் நீடிக்கும். அதேநேரம் நீண்டகால அடிப்படையில் நமது பொருளா தார வளர்ச்சிக்கு உதவும்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்பது ஒட்டுமொத்தமாக பொரு ளாதரத்தை மாற்றக்கூடியது. திரும்பவும் முழுவீச்சோடு பொரு ளாதாரத்தை வளர்ச்சி அடையச் செய்யக் கூடியது. இதனால் உள்நாட்டு நிகர உற்பத்தி (ஜிடிபி) மதிப்பு அதிகரிக்கும்.
தேசிய ஜிடிபி மதிப்பைவிட, ஒடிசா ஜிடிபி வளர்ச்சி வீதம் அதிகரித்து வருகிறது. இது தேசிய அளவிலான ஜிடிபி உயர்வதற்கு உதவும். மேக் இன் ஒடிசா போன்ற திட்டங்கள் மூலம் ஒடிசா அரசு மத்திய அரசுக்கு முழு ஆதரவையும் அளித்து வருகிறது.
ஒடிசா மாநிலத்தைப் பொறுத்த வரையில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் சதவீதம் அதிக மாக உள்ளது. மாநில வளர்ச்சியின் மூலம் மக்களின் வறுமைக் கோட்டு சதவீதத்தை குறைக்க முடியும். சமீப காலத்தில் இந்த சதவீதம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந் துள்ளது. இவ்வாறு அவர் தெரி வித்தார்.