இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) ஆயுட்கால தலைராக சுரேஷ் கல்மாடி, அபய் சிங் சவுதாலா ஆகியோர் கடந்த செவ் வாய்க்கிழமை நியமிக்கப்பட்ட னர். ஊழல் வழக்குகளில் சிக்கிய இருவருக்கும் இப்பதவி வழங் கியதற்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு ஐஓஏ-வுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
வழக்குகளில் இருந்து விடு விக்கப்படும் வரை இப்பதவியை ஏற்க மாட்டேன் என சுரேஷ் கல்மாடி அறிவித்தார். ஆனால் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் கேட் டுக்கொண்டால் மட்டுமே பதவி யேற்கும் முடிவை கைவிடுவேன் என அபய் சிங் சவுதாலா கூறினார்.
இந்நிலையில் மத்திய அரசின் நோட்டீஸுக்கு ஐஓஏ கூடுதல் அவகாசம் கோரியது. நியமனங்களின் சட்டபூர்வ அந்தஸ்து குறித்து சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திடம் ஆலோசித்த பிறகே எந்தவொரு முடிவும் எடுக்க முடியும் என ஐஓஏ கூறியது.
இந்நிலையில் ஐஓஏ அங்கீ காரம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக மத்திய விளை யாட்டுத் துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.