ஒடிசா மாநிலத்தின் கோராபுட் மாவட்டம், கோட்பத் நகரில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட, முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று ஹெலிகாப்டரில் புறப்பட்டார். இந்நிலையில் கோட்பத் நகரில் ஹெலிகாப்டர் தரையிறங்கும் இடம் குறித்த சரியான தகவல் (அட்சரேகை, தீர்க்க ரேகை விவரம்) விமானிக்கு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் தரையிறங்கும் இடத்தை அவர் கண்டறிய முடியாததால் வானில் சுமார் 45 நிமிடங்களுக்கு ஹெலிகாப்டரில் வட்டமடிக்க நேரிட்டது. ரேடார் மூலம் ஹெலிகாப்டர் கண்காணிக்கப்பட்டாலும், இத னால் பாதுகாப்பு அதிகாரிகள் மிகுந்த பதற்றம் அடைந்தனர். பிறகு சரியான தகவல் விமானிக்கு தரப்பட்டு, ஹெலிகாப்படர் பத்திரமாக தரையிறங்கியது.
இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என கோராபுட் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.எஸ்.மீனா கூறினார்.