இந்தியா

ரூ.5,000-க்கும் மேலான தொகைக்கு ரொக்கமற்ற பரிவர்த்தனை மேற்கொள்க: அமைச்சகங்களுக்கு ஜேட்லி அறிவுறுத்தல்

விகாஸ் தூத்

அரசுத்துறைகள் தங்கள் செலவினங்களுக்கான தொகையை அளிக்கும் போது ரூ.5000-த்துக்கும் மேலான தொகைக்கு ரொக்கமற்ற பரிவர்த்தனை முறையை கடைபிடிக்குமாறு அருண் ஜேட்லி அமைச்சகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து அரசுத்துறைக்கு பொருட்கள் அளிப்போர், ஒப்பந்ததாரர்கள் ஆகியோருக்கு ரூ.5000-த்துக்கும் மேலான தொகைக்கு ரொக்கமற்ற பரிவர்த்தனை மேற்கொள்ள ஜேட்லி அறிவுறுத்தியுள்ளார்.

இந்த ஆண்டு ஆகஸ்டில் இது ரூ.10,000-ஆக இருந்தது, தற்போது நோட்டுகள் தட்டுப்பாட்டினால் மாற்று பணம் செலுத்தும் முறைகளை கையாளுமாறு நிதியமைச்சர் ஜேட்லி அறிவுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து அரசு இயந்திரங்கள், துறைகள் தங்களது செலவினங்களைச் சந்திக்க அளிக்க வேண்டிய தொகைகளுக்கு மின் பணம் செலுத்தும் முறை உள்ளிட்ட ரொக்கமற்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ள நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT