இந்தியா

பிஹார் சிறையிலிருந்து 5 கைதிகள் தப்பியோட்டம்

பிடிஐ

பிஹார் மாநிலம் பக்சார் சிறையிலிருந்து ஆயுள் கைதிகள் நால்வர் உட்பட 5 பேர் தப்பிச் சென்றனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் ராமன் குமார் கூறும்போது, "வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல் கைதிகள் அவரவர் அறைகளில் அடைக்கப்பட்டனர். நள்ளிரவுக்குப் பின் அதிகாலைக்குள் கைதிகள் தப்பியிருக்க வேண்டும்.

சிறை சுவரில் துளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது. கைதிகள் தப்பிச் சென்ற சிறை சுவருக்கு அருகே இரும்புக் கம்பி, பைப்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பக்சார் சிறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு தப்பியோடிய கைதிகளை பிடிக்க வேண்டும்" என்றார்.

காவல்துறை கண்காணிப்பாளர் உபேந்தரா சர்மா கூறும்போது, "சிறையிலிருந்து தப்பிச் சென்ற ஐந்து பேரில் பிரஜித் சிங், கிர்தரி ராய், சோனு பாண்டே, உபேந்தரா சாஹ் ஆகிய 4 பேர் ஆயுட்கால சிறைத்தண்டனை பெற்றவர்கள். சோனு சிங் என்பவர் 10 வருட சிறைதண்டனை விதிக்கப்பட்டவர். சிறையில் பனிமுட்டம் நிலவியதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்" என்றார்.

தப்பிச் சென்ற கைதிகளை விரைவில் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை முடக்கி விடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT