இந்தியா

தமிழக அரசு கோரினால் கூடுதல் படைகளை அனுப்புவோம்: மத்திய அரசு

செய்திப்பிரிவு

தமிழக அரசு கேட்டுக் கொண்டால் தமிழகத்துக்கு கூடுதலாக மத்திய படைகளை அனுப்பி வைப்போம் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜுஜு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் திங்கட்கிழமை கூறும்போது, "தமிழகத்தில் போதுமான அளவு மத்திய பாதுகாப்புப் படையினர் முகாமிட்டு உள்ளனர். நாங்களாக கூடுதல் படைகளை அனுப்ப முடியாது.

தமிழக அரசு கேட்டுக் கொண்டால் கூடுதல் படைகளை அனுப்பி வைக்க தயாராக உள்ளோம். படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். தமிழக அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும்" என்று அவர் தெரிவித்தார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT