பாட்னா: பிஹார் மாநிலத்தின் சரண் மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை கள்ளச்சாரயம் குடித்து 60 பேர் உயிரிழந்தனர். இவர்களுக்கு அரசு நஷ்ட ஈடு வழங்கமுடியாது என்று சட்டப்பேரவை யில் முதல்வர் நிதிஷ் கூறினார்.
இந்நிலையில் சரண் மாவட் டத்துக்கு அருகில் உள்ள சிவான் மாவட்டத்தின் பிரமஸ்தான் மற்றும் சந்தானி ஆகிய கிராமங்களில் நேற்று முன்தினம் 5 பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்துள்ளனர். சிவான் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்து இதுவரை 3 பேர் மட்டுமே இறந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என எஸ்.பி. சைலேஷ்குமார் சின்ஹா தெரிவித்துள்ளார்.