தேர்தல் சட்டங்களை விரிவான முறையில் சீராய்வு செய்து வரு வதாக தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடந்த தேர்தல் சட்டங்கள் தொடர்பான தேசிய கருத்தரங்கில் பங்கேற்ற போது அவர் பேசியதாவது:
தேர்தல் ஆணையத்தின் சட்ட வல்லுநர்கள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை விரிவான முறையில் சீராய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் சீர் திருத்தங்களும் மிக முக்கியமானது. சட்ட உருவாக்கத்துக்காக அந்தந்த காலங்கட்டங்களில் மேற்கொள்ளப் பட்ட 47 சீர்திருத்த பரிந்துரைகளை தற்போது வெளியிடுவதில் நாங் கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். சட்ட ஆணையமும் இந்தப் பரிந் துரைகளில் பெரும்பாலானவற்றை ஏற்றுக் கொண்டும் உள்ளது. அந்தப் பரிந்துரைகளை தற்போது சட்ட அமைச்சக குழு ஆய்வு செய்து வருகிறது.
அரசியல் கட்சிகளின் நிதி செலவுகளை வெளிப்படையாக்கு வது, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதை கடுமையான குற்ற மாக்குவது, பணம் கொடுத்து வெளி யிடப்படும் செய்திகளை குற்ற மாக்குவது, வாக்காளர்கள் விலைக்கு வாங்கப்பட்டது தெரிந் தால் தேர்தலை ரத்து செய்யும் அதி காரத்தை தேர்தல் ஆணையத் துக்கு வழங்குவது உள்ளிட்ட பரிந் துரைகள் அதில் இடம் பெற்றுள் ளன. காலத்துக்கேற்றபடி சட்டத் தில் திருத்தம் கொண்டு வந்தால், தேர்தல் ஆணையமும் தனது கடமையை சிறப்பாக செய்ய முடியும் என்பதற்கு தமிழகத்தில் நடந்த தேர்தலே எடுத்துக்காட்டாக இருக்கும். இவ்வாறு நசிம் ஜைதி பேசினார்.