இந்தியா

எல்லை தாண்டிய காதல்: பாக். சிறையில் வாடும் மகனை மீட்க பெற்றோர் தவிப்பு

செய்திப்பிரிவு

மும்பையைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பத் துறை பொறியாளர் அன்சாரி. 2012-ம் ஆண்டு, வேலை தேடி ஆப்கானிஸ்தான் சென்றார். சென்ற இடத்தில், மேற்கு பாகிஸ் தானைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் இணைய வழி காதல் ஏற்பட்டது.

காதலித்த பெண்ணுக்கு வேறு மாப்பிள்ளை பார்ப்பதை அறிந்து, அதைத் தடுப்பதற்காக பாகிஸ்தா னின் மேற்கு எல்லையை தாண்ட முயன்றுள்ளார். ஆனால் ராணுவம் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.

மும்பையில் உள்ள அன்சாரி யின் பெற்றோர் ஃபாஸியா-நிஹார் அகமது கடைசியாக, 2012 நவம்பர் 10-ம் தேதி மகனுடன் பேசியுள்ளனர். அதன்பிறகு தொடர்புகொள்ள முடியவில்லை.

நேரில் சென்று பார்க்க திட்ட மிட்டு, 20 முறை விசா கேட்டு விண் ணப்பித்தும் கிடைக்கவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் இதுகுறித்து முறையிட்டனர். அவர் மூலமாக கருணை மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமிர்தசரஸில் ஆசியாவின் இதயம் மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் வெளியுறவு விவகாரங்களுக்கான ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் வருவதை அறிந்து, மாநாடு நடக்குமிடத்துக்கு அன்சாரியின் பெற்றோர் வந்தனர்.

‘மதிப்புக்குரிய அஜிஸ், அமைதி நோக்கத்துக்காக வந்திருக்கும் நீங்கள், ஒரு தாய் மகனைப் பார்க்க உதவுங்கள்’ என எழுதப்பட்ட பதாகையை கையில் ஏந்தியபடி அன்சாரியின் பெற்றோர் நின்றிருந்தனர்.

பாசியா கூறும்போது, ‘மனிதாபிமான நடவடிக்கைகள், மனித உறவுகள் அரசியலுக்கு அப்பாற்பட்டவை. தாய்க்கும், மகனுக்குமான உறவு எல்லை தாண்டி அனைவருக்கும் புரியக் கூடிய பொதுவான உணர்வு.

ஏற்கெனவே 4 ஆண்டுகளை அன்சாரி சிறையில் கழித்துவிட் டான். அதனைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டு சட்ட விதி களுக்கு உட்பட்டே அன்சாரியை விடுவிக்க முடியும். பாகிஸ்தான் அரசு இதனைச் செய்யும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம்’ என்றார்.

SCROLL FOR NEXT