அமைதி, ஆயுதங்களை கைவிடச் செய்யும் நடவடிக்கை மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் சிறப்பான பங்காற்றியோருக்கு இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது.
2015-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருதுக்கு, அகதிகளுக்கான ஐநா ஆணையத்தை துணை குடியரசுத் தலைவர் ஹமிது அன்சாரி தலைமையிலான நடுவர் குழு கடந்தாண்டு தேர்வு செய்து அறிவித்தது.
இதைத்தொடர்ந்து டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் அறக்கட்டளைத் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில், அகதிகளுக்கான ஐநா ஆணைய (இந்தியா) தலைவர் யாசுகோ ஷிமிஸுவிடம், இந்திரா காந்தி அமைதி விருதை அறக்கட்டளை யின் அறங்காவலர் மன்மோகன் சிங் வழங்கினார். ஜெய்ப்பூர் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்ட கோப்பை, பாராட்டு பத்திரம் ஆகிய வற்றுடன், ரூ. 1 கோடி பணமும் இவ்விருதில் அடங்கும்.