கோப்புப்படம் 
இந்தியா

டிஜிட்டல் ஊடக ஒழுங்குமுறைக்கு தனிச் சட்டம் இயற்றும் திட்டம் இல்லை: மத்திய அரசு 

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்கு முறைப்படுத்துவதற்கான தனிச் சட்டம் இயற்றும் உத்தேசம் தற்சமயம் அரசின் பரிசீலனையில் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான கேள்விக்கு மாநிலங்களவையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

அவர் அளித்த பதிலில், “2000-ஆவது ஆண்டின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்து 2021ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளைக் கொண்டுவந்தது. டிஜிட்டல் ஊடகங்கள் இந்த விதிமுறைகள்படி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளை மீறும் ஊடகங்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வகை செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT