இந்தியா

பதான்கோட்டில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

பிடிஐ

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

பதான்கோட் மாவட்டம் திண்டா பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள வேலி தடுப்பை மீறி தீவிரவாதி ஒருவர் ஊடுருவ முயன்றபோது எல்லை பாதுகாப்புப் படை வீரர் அவரை சுட்டு வீழ்த்தினார்.

இதற்கிடையில், பதான்கோட்டில் ஆயுதம் ஏந்திய சிலர் ஊடுருவியிருப்பதாக உள்ளூர்வாசிகள் கூறியதையடுத்து பஞ்சாப், இமாச்சலப் பிரதேச போலீஸாரும் ராணுவத்தினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சாப் - இமாச்சல எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 250 பேர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் பதான்கோட் ராணுவ முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT