இந்தியா

மெயின்புரி மக்களவைத் தொகுதி எம்.பி.யாக அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவ் பதவியேற்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் கடந்த அக்டோபர் மாதம் காலமானார். இதனால் காலியான அவரது மெயின்புரி மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இங்கு சமாஜ்வாதி கட்சி சார்பில் முலாயம் சிங்கின் மருமகளும் உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் சிங்கின் மனைவியுமான டிம்பிள் யாதவ் போட்டியிட்டார். பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சி இங்கு போட்டியிடவில்லை.

இந்நிலையில் பாஜக வேட்பாளர் ரகுராஜ் சிங் சாக்யாவை விட 2.8 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் டிம்பிள் யாதவ் வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்கு பிறகு அவர் கூறும்போது, “மெயின்புரி வாக்காளர்கள் வரலாறு படைப்பார்கள் என்று நான் தொடர்ந்து கூறி வந்தேன். இது மறைந்த நேதாஜிக்கு (முலாயம் சிங் யாதவ்) மெயின்புரி வாக்காளர்கள் செலுத்தும் அஞ்சலியாகும்” என்றார்.

இந்நிலையில் மக்களவை எம்.பி.யாக டிம்பிள் யாதவ் நேற்று பதவியேற்றுக் கொண்டார். 44 வயதான டிம்பிள், மெயின்புரி தொகுதியின் முதல் பெண் எம்.பி. என்ற பெருமையை பெற்றுள்ளார்.

SCROLL FOR NEXT