பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதிக்கு அருகே பதான்கோட் நகரில் கேட்பாரற்று கிடந்த காரால் பரப்பரப்பு ஏற்பட்டது.
பதான்கோட்டின் ஃபர்பல் கிராமத்தில் புதன்கிழமை இரவு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் உலா வந்த காரை கண்ட கிராம மக்கள் அந்தக் காரை பின் தொடர்ந்துள்ளனர்.
கிராம மக்கள் பின் தொடர்வதை கண்ட காரில் இருந்தவர்கள் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு அபாய ஒலி எழுப்பட்டிருக்கிறது.
இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ராகேஷ் குமார் கௌஷல் கூறியதாவது,"பதான்கோட் நகரில் கேட்பாரற்ற நிலையில் கார் ஒன்று நின்றிருந்தது.
நம்பர் பிளேட் இல்லாமலும் பூட்டப்பட்ட நிலையிலும் அந்தக் கார் இருந்தது. கிராம மக்கள் கூறியதுபோல் அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு ஏதும் நடைபெறவில்லை.
கிராம மக்கள் சந்தேகத்தின் அடிப்படையில் அந்த காரை பின் தொடர்ந்துள்ளனர். காரின் உரிமையாளர் குறித்து அறிய தேடுதல் வேட்டைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று கூறினார்.