இந்தியா

உத்தராகண்ட் முதல்வருக்கு சிபிஐ சம்மன்

செய்திப்பிரிவு

உத்தராகண்டில் ஹரீஷ் ராவத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த மார்ச் மாதம் காங்கிரஸை சேர்ந்த 9 அதிருப்தி எம்எல்ஏக்கள் திடீரென பாஜகவுக்கு ஆதரவு அளித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அந்த மாநில சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதல்வர் ஹரீஷ் ராவத் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார்.

அந்த நேரத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களிடம் ஹரீஷ் ராவத் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. தனியார் தொலைக்காட்சி சேனலின் ‘ஸ்டிங் ஆபரேஷன்’ மூலம் ராவத் பண பேரம் நடத்திய வீடியோ காட்சிகள் வெளியாகின.

இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தியது. இது தொடர்பாக வரும் 26-ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் முதல்வர் ஹரீஷ் ராவத் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT