இந்தியா

பாரதியின் தொலைநோக்குப் பார்வைகளை நிறைவேற்ற முயற்சிக்கிறோம் - பிரதமர் மோடி ட்வீட்

செய்திப்பிரிவு

மகாகவி பாரதியாரின் 140வது பிறந்தநாளை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பாரதியார் பெருமைகளைப் புகழ்ந்து ட்வீட் செய்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், "“போற்றுதலுக்குரிய சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளன்று அன்னாரை நான் வணங்குகிறேன். அபாரமான துணிச்சல் மற்றும் தலைசிறந்த அறிவு கூர்மையின் எடுத்துக்காட்டாக ‘மகாகவி பாரதியார்' விளங்கினார். இந்தியாவின் முன்னேற்றத்தை குறித்தும், ஒவ்வொரு இந்தியரின் வளர்ச்சி குறித்தும் அவர் மாபெரும் கனவு கண்டார். பல்வேறு துறைகளில் அவரது கனவுகளை நிறைவேற்ற நாம் பாடுபட்டு வருகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

பாரதியார், ஐந்து வயதில் தாயை இழந்து, பதினைந்து வயதில் தந்தையை இழந்து, அத்தையின் உதவியோடு காசிக்குச் சென்று, வேதங்களையும் பல மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். கவிஞராக, இதழியலாளராக, விடுதலை வேட்கை கொண்ட புரட்சியாளராக, யாருக்கும் அஞ்சாத்திறம் கொண்ட கொள்கையாளராக, தத்துவவாதியாக பல்வேறு பரிமாணங்களில் அறிவுக் கிளைபரப்பி நின்றார். அவருடைய 140 பிறந்தநாள் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

SCROLL FOR NEXT