இந்தியா

ஜனவரி 1 முதல் ஆதார் எண் அடிப்படையில் விமான நிலைய ஊழியர்களுக்கு அடையாள அட்டை

செய்திப்பிரிவு

விமான நிலையங்களில் உச்சபட்ச பாதுகாப்பு மிகுந்த பகுதிகளுக்கு செல்ல விமான நிலைய நுழைவு அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன.

அடையாள அட்டைகள் மூலம் அந்தப் பகுதிக்கு செல்லும் ஊழியரோ அல்லது தனி நபரோ குற்றச் செயல்களில் ஈடுபட்டால் உடனடியாக அவர்கள் அப்பகுதிக்கு வர தடை விதிக்கப்படுகிறது. எனினும் வேறொரு புதிய அடையாள அட்டைகளுடன் அப்பகுதிக்கு வரும் குற்றம் செய்த நபர்களைக் கண்டுபிடிப்பதில் சிரமங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து விமான போக்குவரத்து பாதுகாப்பு முகமையின் பரிந்துரையின் பேரில் உச்சபட்ச பாதுகாப்பு மிகுந்த பகுதிகளுக்குச் செல்வோருக்கு ஆதார் எண் இணைக்கப்பட்ட நுழைவு பாஸ்கள் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய தொழில் பாதுகாப்புப் படை இயக்குநர் ஜெனரல் ஓ.பி.சிங் கூறும்போது, ‘‘ஜனவரி 1-ம் தேதி முதல் விமானநிலைய நுழைவு அடையாள அட்டைகள் அனைத்தும் ஆதார் எண்ணைப் பயன்படுத்தியே வழங்கப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT